தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசின் அங்கிகாரம் பெற்ற இயக்கம் ஆகும்.
அரசு ஏற்பு எண்: 1998 நாள் : 05 .09 .1981. பதிவு எண் : 46 /71 & 17 /75.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் பல்வேறு காலகட்டங்களில் பல போரட்டங்களை நடத்தி பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது. இன்று அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் பெற்றுவரும் உரிமைகளும் சலுகைகளும் நமது இயக்கத்தின் மூலமே பெறப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மேல் நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் நமது இயக்கத்தில் சேர்ந்து பயனடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
*****************************************
சுருக்கம்
சங்கங்கள் - ஆசிரியர் சங்கங்கள் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - அங்கிகாரம் அளித்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
கல்வித்துறை
அரசாணை ( நிலை ) எண் : 1998 நாள் : 05 .09 .1981
பார்வை :
1. அரசாணை ( நிலை ) எண் : 2512, கல்வி நாள் 24.11.1980.
2. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க 24.12.1980 நாளிட்ட கடிதம்.
3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித எண். 104746 /சி8 /80 நாள் 24.12.1980.
4. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க 24 .02 .1981 நாளிட்ட கடிதம்.
5. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 02 .03 .1981 நாளிட்ட கடிதம்.
6. பள்ளிக்கல்வி இயக்குநரின் 23.03.1981 நாளிட்ட கடித எண். 291835 பி1/௮௦
ஆணை :
1 . பார்வை ஒன்றில் குறிப்பிட்ட அரசாணையில் ஆசிரியர் சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு விதிமுறைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (பதிவு எண். 17 /1975 ) மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (பதிவு எண். 118 /61 ) தங்கள் சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. பள்ளிக்கல்வி இயக்குநர் மேற்கூறிய சங்கங்ககளுக்கு அங்கீகாரம் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.
2. பத்தி 1ல் குறிப்பிட்ட கோரிக்கைகளை அரசு கவனமாக பரிசீலித்தது. அரசாணை நிலை எண். 2512 கல்வி நாள் 24 .11 .1980ல் கண்ட விதிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வாத விதிகளை நீக்கி விட்டு, விதிகளை அமைக்கவேண்டும் என்று நிபந்தனையின் பேரில் மேற்கண்ட இரண்டு சங்கங்களுக்கும் அங்கீகாரம் வழங்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.
3. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய இரு சங்கங்களுக்கும் அரசாணை நிலை எண். 2512 கல்வி நாள் 24 .11 .1980ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு அங்கீகாரம் வழங்க அரசு ஆணையிடுகிறது.
4. பள்ளிக்கல்வி இயக்குநர் மேல குறிப்பிட்டுள்ள ஆணைகளுக்கு ஏற்ப அமைக்கும் மேற்படி சங்கங்களின் விதிமுறைகளை பெற்று சரிபார்த்து அரசுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
( ஆளுநரின் ஆணைப்படி )
செ. ராம்தாஸ், ஆணையாளர் மற்றும் அரசுச் செயலாளர்